தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்ரியா, சங்கர்,
தமிழ்ச்செல்வன் ஆகிய பள்ளி மாணவர்கள் மக்காத வகையைச் சேர்ந்த பேனாக்கள்
தங்களது பைகளில் நிரம்பியிருப்பதைக் கண்டு அதற்கான நிலையான மாற்றை
கண்டறிவதில் முனைப்புடன் இருந்தனர். தமிழ்நாட்டின் புதுப்பாளையம்
கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி மாணவர்களான
இவர்கள் ஆர்கானிக் பேனாவை தயாரித்துள்ளனர். இந்த பேனாக்கள்
அப்புறப்படுத்தும்போது ஆர்கானிக் உரமாக மாறிவிடும்.
வாழை இலை, வாழைத்தண்டு, தென்னை இலை, ஆமணக்கு தண்டு
ஆகியவற்றைக் கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இதன் ட்யூப்பின் ஒரு
முனை மைதா பசை கொண்டு மூடப்பட்டு இன்க் நிரப்பப்படுகிறது. இந்த பேனாவில்
மக்காத ஒரே பகுதி அதன் கூர்முனை (nib). இவை சில மாதங்கள் வரை
பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேனாக்கள் பள்ளியில் சில நாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஏற்கனவே திறனாய்வு செய்யப்பட்ட
இந்த கண்டுபிடிப்பு விரைவில் மதிப்புமிக்க 2017 தேசிய அறிவியல் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படும் என்று ஹோம்க்ரோன் அறிக்கை தெரிவிக்கிறது.
தி ஹிந்து தகவல்படி இந்த மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியரான எஸ் தினேஷ் குறிப்பிடுகையில்,
இந்த ப்ராஜெக்ட் 2017 தேசிய அறிவியல் மாநாட்டிற்காக
வடிவமைக்கப்பட்டது. நடுத்தர பள்ளிகளில் செயல்படும் தமிழ்நாடு அறிவியல்
மன்றத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டு இயங்கும் துளிர் இல்லம் யூனிட் கடந்த
சில ஆண்டுகளாக தேசிய அறிவியல் மாநாட்டிற்காக வெவ்வேறு ப்ராஜெக்டுகளை
சமர்ப்பித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை
குறைக்க உதவும் பல கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. பெங்களூருவைச்
சேர்ந்த ஒரு தம்பதி கைகளால் உருவாக்கப்பட்ட சிகரெட் ஃபில்டர் டிப்ஸை
உருவாக்கினர். இவை தூக்கியெறியப்படும்போது நிலத்தில் விதைகளை வெளியேற்றும்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரெட்யூஸ், ரீயூஸ், க்ரோ என்கிற நிறுவனம் ஒரு
காஃபி கப்பை வடிவமைத்தது. இது மக்கக்கூடியதாக மட்டுமல்லாமல் இதிலுள்ள
விதைகளை நட்டு வைத்தால் சுவர்களில் படர்ந்து வளரும் செடிகளாகும்
விதத்திலும் அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...