'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து,
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன.
சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...