ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு
வந்தபொழுது,இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக இல்லை.
இங்கே, 565 சிற்றரசுகள்
இயங்கி வந்தன. இந்தியத்துணைக்கண்டத்தில் வணிக நடவடிக்கைகளைத் துவக்கிய
கிழக்கு இந்திய வணிக நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக, இந்திய
நிலப்பகுதிகளைக்கைப்பற்றிக் கொண்டு, வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.ஆயினும், பிரித்தானியப் பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டே, அந்த ஆட்சிப் பகுதிகள்இயங்கி வந்தன. 1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் நிகழ்ந்த 'சிப்பாய் கலகம்' எனப்படுகின்ற முதல் விடுதலைப் போருக்குப் பிறகு, 1859 ஆம் ஆண்டு, பிரித்தானியப் பேரரசி விக்டோரியா, கிழக்கு இந்திய வணிக நிறுவனத்திடம் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை,நேரடியாகத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
நவம்பர் முதல் தேதி இந்தியாவின் கர்நாடகம், கேரளா,தமிழ்நாடு என மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கர்நாடமும்,கேரளமும் இந்த நாளைக் கொண்டாட தமிழகமோ இந்த நாளை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை... இது ஏன் என்று தெரியுமா?

துவக்கப்புள்ளி
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கை களின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது! தனி மாநில/மாகாண கோரிக்கை களின் தொடக்கம் ஒரிசா 1895-ல் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதி யாக இருந்த ஒரிசாவில் பிரிட்டிஷ் அரசு நிர்வாக வசதிக்காக இந்தியை ஒரிசாவின்மீது திணித்தபோது, சம்பல்பூரில் போராட்டம் வெடித்தது. அதிலிருந்து ஒரிசா தனி மாகாண மாக ஆக்கப்படவேண்டும் என போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது.

காங்கிரஸ்
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டி வரும் என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால், ஆங்கிலேயர் அமைத்த மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பா லான இடங்களில் மொழிவாரியாகத்தான் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காந்தி-நேரு
சுதந்திரம் பெற்றதுமே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க நேரு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா பாதிக்கப்பட்டி ருக்கும் நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்று நேரு கருதினார்.
ஆனால், மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதை நேருவால் தடுக்க முடியவில்லை.

பிரிவினை ஆரம்பம்
நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1950-களில் எழுந்த்து.ஆரம்பத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலும் அதனை ஏற்கவில்லை.
ஆனால்,சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து அதனை விசால ஆந்திராவாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு வித்திட்டவர், ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பொட்டி ஸ்ரீராமுலு.
ஆந்திர பிரதேசம் உதயமானது
அவர் தனது கோரிக்கையை முன்னிறுத்தி, சென்னையில் 1952, அக். 19-இல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார். இறுதியில், 1952, டிச. 15-இல் உண்ணாவிரத நிலையிலேயே காலமானார். 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவரது தியாகத்தால், தெலுங்கு பேசும் பகுதிகள் தனி மாநிலமாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவிக்க வேண்டி வந்தது. அதன்படி, 1953, அக். 1-இல் தனி ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.
அதே ஆண்டில் (1953) ஃபஸல் அலி, கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய மாநில மறு சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
அவர்கள் அளித்த பரிந்துரைப்படி 1956-இல் மாநில மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1956, நவ. 1-இல் மொழி அடைப்படையில் 14 மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உடன் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு :
மொழிவாரி மாநிலப் பிரிவினை சூறாவளியாகச் சுழன்றடித்த வேளையில் தமிழகம் ஒரு விநோதமான சூழலைச் சந்தித்தது. மொழி அரசியலுக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி என்று கருதப்படும் தமிழகம் 1940-50-களில் இவ்விஷயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்தது.
காங்கிரஸ்காரராக இருந்த சர் சி. சங்கரன் நாயர் 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்திலுள்ள பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீ்ழ் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரதேசமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட ஒரு தனிநாடு கோரிக்கையாகவே அது இருந்தது. அது அப்போது ஏற்கப்படவில்லை
பெரியார்
முதன்முதலாக, 'இந்தியா என்பது ஒரு நேஷனா?' என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியது இதற்குப் பின்புதான். 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகு திராவிட, தமிழ்த் தேசியவாதிகள் அல்லது தமிழறிஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்குட்பட்ட தமிழ் மாகாணம் ஒன்றை இந்திய எல்லைக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியிலோ கேட்டார்கள். ஆனால், அவை எதுவுமே பெரும் போராட்டங்களாக வெடிக்கவில்லை.
50-களில் மற்ற இடங்களில் ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரம், விசாலாந்திரம், கர்நாடக ஏகிகரண இயக்கம் என்றெல்லாம் இயக்கங்கள் தோன்றி மொழி அடை யாள அரசியல் பரவிய நேரத்தில், தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்கான வியூகத்தை வகுத்திருக்கவில்லை.
தமிழகத்தில் ஏன் கொண்டாடவில்லை?
இப்படி ஒரு திராவிட தேச மயக்கத்தில் தமிழகம் இருந்தபோதுதான், இந்தியா முழுக்க மொழிவாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டபோது, தேவிகுளமும் பீர்மேடும் மட்டும் ‘புவியியல்' காரணங்களுக்காக கேரளத்திடமே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது.
அது திராவிட நாட்டில் இருப்பதால் அண்ணா சகித்துக்கொண்டார். காமராஜருக்கோ அவை இந்தியாவில்தானே இருக்கிறது என்பதால் கவலை இல்லை. பெரியாரோ, தான் சமூக முன்னேற்றத்துக்காகப் போராடுகிறவனே ஒழிய, இந்தியாவின் விரிவாக்கத்திற்கு போராடுபவன் இல்லை என்று அறிவித்துவிட்டார்.
இவ்வாறாக, சென்னை மாகாணத்தின் எச்சமாக தமிழ்நாடு வேறு வழியில்லாமல்- உருவானது. அதனால்தான், தமிழகத்தில் நவம்பர் 1, கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்வாக அமையவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...