'பொதுமக்கள்
வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில்
விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை
இடம் பெறுவது கட்டாயம் ஆக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, லோக் ஜனசக்தியைச் சேர்ந்த, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நகை கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளின் தரம் குறித்து, வாடிக்கையாளர்கள் அறிவது அவசியம்.எனவே, அனைத்து நகை கடைகளிலும், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் என, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது, சில கடைகளில், பி.ஐ.எஸ்., முத்திரையிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. எனினும், அவற்றில், தங்கத்தின் தரம் குறித்த போதுமான அம்சங்கள் இல்லை.
எனவே, ஹால்மார்க் முத்திரை பெற்று விற்பனை செய்வது அவசியம். நகைகளின் தரத்திற்கு ஏற்ப, 14, 18, 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படும். இந்த நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...