Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வுக்கால பலன்களை பெற இயலாமல் தவிக்கும் AEEO & HMs!

🛑 ஆறாவது ஊதியக்குழுவில் சாதாரண இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் 750ஐ 1.1.2011க்கு பிறகு பதவி உயர்வில் அடிப்படை ஊதியமாக மாற்றி கூடுதல் ஊதியம் தப்பட்டுள்ளது .


🛑மதுரை மண்டல பள்ளிக் கல்வித்துறை அலுவலர் அவர்களின் தவறான, கூட்டு புள்ளி பிழையான ஊதிய நிர்ணய மாடலை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக வழங்கியதால் ஏற்பட்ட 900கோடி மிகை ஊதியத்தை திருப்ப செலுத்த கூறியுள்ளது தமிழக அரசு ..

🍑ஆண்டுகள் பல கடந்தும் தொடரும் இளையோர் - மூத்தோர் முரண்பாடுகளை களைய இயல வழியற்று ஆசிரியர்களும் கல்வித்துறை அலுவலர்களும் பெருங்குழப்பத்தில் உள்ளனர் ..

🚩இத்தகை தவறான நிர்ணயத்தை செய்ய சொல்லி நிதித்துறை மற்றும் கல்வித்துறை எந்த மாதிரி நிர்ணயத்தையும் வழங்காத நிலையில் தணிக்கை ஆணையை வைத்து செய்த நிர்ணயங்கள் பெரும் சிக்கல்களை உருவாக்கியது .

🔰இத்தகைய தவறான ஊதிய நிர்ணயம் செய்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான AEEO மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்களின் ஓய்வுக்கால பலன்களை பெற இயலாமல் தவித்து வருகின்றனர் . 

🛑இவ்வகையில் பெறும் மிகை ஊதியம் 2.57கணக்கீட்டில் 3500அடிப்படை ஊதியமாகி பெரும் முரண்பாடுகளை உண்டாக்கி உள்ளது ..

🔰இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2016ல் அடிப்படை ஊதியத்துடன் இணையாத தனி ஊதியம் 750ஐ அதற்கு முன்பாக பதவி உயர்வில் சென்றவர்களுக்கு வழங்கிய DDO'S களும் வாங்கிய ஆசிரியர்களும் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் ..

🍎ஏழாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு 2000pp எந்த பலனுக்கும் பொருந்தாத போது பதவி உயர்வில் 750 pp மற்றும் 2.57 வழியாக தவறாக  பெற்ற 3000 எல்லா பணப்பலன்களுக்கும் பொருந்துவது மிகப் பெரிய சர்ச்சையை கல்வித்துறையில் ஏற்படுத்தி உள்ளது ..


 🍎 தற்போது ஓய்வு பெற்று விட்ட பிறகு சம்பத்தப்பட்ட ஆசிரியர்களை அணுகி அதிக படியாக பெற்ற பணத்தை திருப்பி காட்டுமாறு கோரிக்கை வைத்தாலும் ஒரு சிலர் திரும்ப கட்டாமல் தவிர்க்கின்றனர். இதனால் ஓய்வு பெற்று விட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தாங்கள்  பாதிக்கப்படுவதாக கூறி தவிக்கின்றனர்.

🔰விதிகளை பின்பற்றாத சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களும் மிகையான லட்சக்கணக்கான அரசு பணத்தை தவறாக பெற்ற ஆசிரியர்களும் தணிக்கை அலுவலர்களின் அலட்சியமும் கல்வித்துறையில் பெரும் கொதிப்பை உண்டாக்கி உள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive