பிஎஸ்என்எல் சிம்முடன் இணைந்த மைக்ரோமேக்ஸ் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு,
பிளான்-97 என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97 கட்டணத்தில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்வதோடு, 5 ஜிபி வரை டேட்டாவும் வழங்கப்படுகிறது.பிஎஸ்என்எல் நிறுவனம், மைக்ரோமேக்ஸ் இணைந்து ‘பாரத்1’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.2,200 கட்டணம் செலுத்தினால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்போன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டு வழங்கப்படும். இந்த செல்போன் இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளான் - 97 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97-க்கு ரீசார்ஜ் செய்தால் அனைத்து நெட்வொரக் செல்போனுக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன், வேகக் கட்டுப்பாடின்றி 5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...