உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், உயிர்காக்கும் 36
வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்தும், 15 உயிர்காக்கும்
மருந்துகளின் விலையை மாற்றி அமைத்தும் என்.பி.பி.ஏ., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...