பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும்
ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும்,
ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை
ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,
மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின்
முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...