'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள்
வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ -
ஜியோ' அறிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த
பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை
என்றும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு, அரசு ஊழியர்,
- ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி
வருகிறது. இந்த கூட்டமைப்பு, செப்டம்பரில் நடத்திய, தொடர் வேலை நிறுத்த
போராட்டம், உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. அப்போது, நவ.,
30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து, நிபுணர் குழுவின் அறிக்கை
வெளியிடப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 'குறித்த
நாட்களுக்குள் நிபுணர் குழு அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால்,
போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: உயர்
நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தபடி, நிபுணர் குழுவின் அறிக்கை,
நவ., 30ல் வெளியிடப்பட வேண்டும்.
அதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என,
எதிர்பார்க்கிறோம். அறிக்கை வராவிட்டால், டிச., 4ல், உயர்மட்டக்குழு கூடி,
அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இது குறித்த வழக்கு,
டிச., 8ல் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தமிழக அரசு தாமதிக்காமல்,
கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...