எண்ணெய் வளநாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையே போர் மூழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.300 வரை உயர வாய்ப்புள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பல ஆண்டுகளாக தங்களுக்குள் மோதி வருகின்றன. மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் தங்கள் மேலாதிக்கத்தை நிரூபிக்க இரு நாடுகளும் போட்டியிடுவதாகவும் இஸ்லாத்தின் இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வாழும் நாடுகளின் மோதலாகவும் இந்த பிரச்னையை சர்வதேச நாடுகள் மதிப்பிட்டு வருகின்றன.
இந்நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே ராணுவத்தைக் களமிறக்கி நேரடி போரில் குதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு போர் ஏற்பட்டால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும். இதனால், பெட்ரோல் டீசல் விலை 500 மடங்கு உயரும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கும். இதன் விளைவாக தற்போது ஏறத்தாழ ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் ரூ.300 வரை விலை உயர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.
லெபனான் பிரதமர் சார் ஹரிரி தங்கள் நாட்டை ஈரான் கட்டுப்படுத்தி வருவதாகக் கூறி தனது நவம்பர் 4ஆம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர்,சவுதி சென்ற அவர் ரியாத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஈரான் - சவுதி இடையே புதிதாக போர் பதற்றம் ஏற்பட முக்கியக் காரணமாகவும் கருதப்படுகிறது. ஆனால், சவுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஹரிரி தான் சவுதியில் கைது செய்யப்படவில்லை என்றும் விரைவில் லெபனால் திரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...