ரூ.399
முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ
அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.
இந்த
ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.
இந்த
கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன.
1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.
2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.
3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...