தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல சலுகைகளை குறைந்த விலையில், வழங்கிவருகின்றன.
இந்நிலையில், ரூ.200-க்கு குறைவான விலையில், சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை எந்த தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் எல்லாம் வழங்குகின்றன என்பதன் தொகுப்பை காணலாம்...
ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149 ரீசார்ஜ் திட்டம், பயனர்களுக்கு 300 எம்பி அளவிலான தரவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி ஏர்டெல் மொபைல் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே 300 எம்பி டேட்டா வழங்கபப்டுகிறது.
மற்றொரு திட்டமான ரூ.199 திட்டமானது, 28 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி / 2ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ:
அன்லிமிடெட் கால் + டேட்டா திட்டமான ரூ.149 திட்டத்தின் கீழ், 4.2 ஜிபி அளவிலான டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் ஆகிய நன்மைகளையும் பெறலாம்.
வோடபோன்:
ரூ.199 திட்டத்தின் கீழ், 1ஜிபி அவிலான 3ஜி / 4ஜி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் இலவச அழைப்புகள் மேற்கொள்ளாம்.
பிஎஸ்என்எல்:
ரூ.186 திட்டத்தின் கீழ், முதல் 28 நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தினசரி தரவை வழங்கி வழங்குகிரது. உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆனாலும் டேட்டா வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.
ஐடியா
ரூ.197 திட்டத்தில், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். இதனுடன் திட்டத்துடன் எந்த அழைப்பு நன்மைகளும் இணைக்கப்படவில்லை.
Idea 198
ReplyDelete1 gb data all call free