கோவை : 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில்
முன்பதிவு செய்த மாணவர்களுக்காக,
15 அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 144 ஆசிரியர்கள் கொண்டு, வகுப்பு நடத்தப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 144 ஆசிரியர்கள் கொண்டு, வகுப்பு நடத்தப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வு உட்பட, அனைத்து
போட்டித் தேர்வுகளையும், பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, கல்வித்துறை
சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு, மாவட்ட வாரியாக, சிறப்பு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம், நேற்று முன்தினம் (அக்., 31ம்
தேதி) முடிந்தது. மாவட்டம் முழுக்க, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்,
பயிற்சி பெற விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு,
வட்டார வாரியாக, 15 அரசுப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கணிதம், இயற்பியல், வேதியியல், பயாலஜி உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு,
வகுப்பு எடுக்க, வட்டாரத்திற்கு மூன்று பேர் வீதம், திறன் மிகு ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுக்க, 144 ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை சார்பில்
வழங்கப்படும் இலவச பயிற்சிக்கு, இணையதளத்தில் பதிவு செய்த, அனைத்து வகை
பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். மாநில பாடத்திட்டத்தை முழுமையாக உள்வாங்கி
படித்த பலர், நீட் தேர்வில், கடந்தாண்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர்.
இருப்பினும், போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால்,
பிரத்யேக சிலபஸ் தயாரித்து, மாணவர்களை வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. விரைவில்
வகுப்புகள் துவங்கும்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...