தமிழகத்தில், ஒரு மாதத்தில் மட்டும், போதையில் வாகனம் ஓட்டியதால், 10 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்சை' இழந்துஉள்ளனர்.
தேசிய அளவில், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே, விபத்துக்களை குறைக்க சிறப்புக் கவனம் செலுத்தும்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், உச்ச நீதிமன்றமும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. இதற்காக, மாவட்டம் தோறும், கலெக்டர்கள் தலைமையில், போலீஸ், போக்குவரத்து மற்றும் கல்வி துறையினர் அடங்கிய சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், அதிக வேகம், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட, சாலை விதிகளை மதிக்காதோரின், லைசென்சை பறிமுதல் செய்யும், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த வகையில், அக்டோபரில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போதையில் வாகனம் ஓட்டி, தங்களின் லைசென்சை இழந்துள்ளனர்.

இது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
குடித்து விட்டு வாகனம் இயக்குவதால், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன; இரவில், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, தமிழக போக்கு வரத்து துறை, 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபரில் மட்டும், சென்னையில், 1,505 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்து, 862 பேர், போதையில் வாகனம் ஓட்டியதால், லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
உரிய விளக்கம் அளிக்காத, 7,332 லைசென்ஸ்கள், தற்காலி கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள, 3,530 பேரும், 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...