வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும்.
தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும்.
ஆனால்,
இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள்,
பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில்
வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப்
ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டு தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா
வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.
வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு
அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம்
செய்ய முற்படும்போது அதனைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப்
பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள்
இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி
வைக்கப்பட்டுள்ளன.
விரைவில் அப்டேட்டுகளுன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப்
வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.இன்ஸ்டன்ட் மெசேஜிங்
ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான்.
இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில்
இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம்
ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பி
விட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Deletefor
Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற வசதி
டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில்
இருக்கும்இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே
பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக
அழித்து விட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள்என
அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக
திரும்பப் பெற முடியும்.மேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்திற்கும்
வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு
பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள்
தரப்படும். இந்த புதிய வசதியினை 'WhatsApp 2.17.295' என்ற பீட்டா வெர்ஷனை
டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள்
1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகம்
முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும்
வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2
Gm. Ragul
ReplyDelete