மேஷம்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.
வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ரிஷபம்
சவாலான
விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை
உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மிதுனம்
சொன்ன
சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கடகம்
மாலை
3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.
தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்
போவது நல்லது.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
சிம்மம்
கணவன்
- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள்
அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தை
பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 3.55 மணி முதல்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கன்னி
கனிவானப்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில்
அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை
ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
துலாம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை
கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். சகோதரர் உதவுவார். பழைய
கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். முன்கோபம் குறையும். வியாபாரத்தில்
பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள்
கிடைக்கும். அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
தனுசு
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
மகரம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள்
பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில்
உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி
ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கும்பம்
மாலை
3.55 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள்.
திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக
சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி
ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில்
விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மீனம்
கணவன்
- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை
வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் நிதானம்
அவசியம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள்
அதிகரிக்கும். மாலை 3.55 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும்
கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...