மேஷம்
குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக
வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவுக்
கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில்
பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ரிஷபம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும்.
உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண்
பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.
உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மிதுனம்
பிள்ளைகளால்
மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி
உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கடகம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
சிம்மம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி
நிலவும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கன்னி
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால்
அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும்
தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
துலாம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல
தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின்
திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும்.
நட்பு வட்டம் விரியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு
அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
தனுசு
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
பூராடம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில்
கறாராக இருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில்
வேலைச்சுமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
மகரம்
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்க வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். வியாபாரத்தில்
வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும்
சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கும்பம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும்.
பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மீனம்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் வேலைகளை
பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை
நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...