மேஷம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள்
விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ரிஷபம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மிதுனம்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி
யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக
அமையும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
சிம்மம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
கன்னி
இரவு
8.51 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு,
மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி
தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் லாபம்
மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
துலாம்
கணவன்-மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை
உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம்
உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.51 மணி முதல்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
விருச்சிகம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
தனுசு
உங்கள்
போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள்
கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
மகரம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர
வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு
காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை
உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கும்பம்
இரவு
8.51 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது
ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள்
அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின்
ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க
வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மீனம்
பிள்ளைகளின்
தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி
கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.
இரவு 8.51 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
Hai frnds
ReplyDelete