அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும்
என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்,
“தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ்-2 பாடத்திட்டம்
மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15ஆம் தேதி
வெளியிடப்பட்டு, வரைவுப் பாடத்திட்டம் குறித்து 15 நாட்கள் பெற்றோர்கள்,
கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும். இந்தக் கருத்துக்களின்
அடிப்படையில் அடுத்த ஆண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்.
சிபிஎஸ்இ. பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்” என்றார்.
அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும்
என்றும் தெரிவித்த அமைச்சர், பள்ளிக் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக
வைத்துக்கொள்ளப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
என்றும் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...