மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்துவது குறித்து நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் சம்பள உயர்வுக்கான அறிக்கையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தினர்.
மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தினர்.
இதன் உச்சக்கட்டமாக கடந்த மாதம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் தலையிட்டு, தமிழக அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் கடந்த மாதம் 27ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அளித்தார். இந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கூடுதலாக வழங்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிசீலித்து வருகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு வாரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பார். மேலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு கூடுதல் சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது.
அதே நேரம், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்அடைய வழிவகை ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
New Pg teachers ku yevalov salary kedaikum???
ReplyDeleteFrom central govt pay new PG will get 47600 not sure about our state
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete2017 ஜனவரி முன்தேதியிட்டா.. அல்லது 2016 லிருந்தா ?
ReplyDelete2016
DeleteIs there any changes in retirement age?
ReplyDeleteExpected 33 year service or age 60 which comes first
DeleteThis is from central govt pay commission
is Tamil Nadu follow Central Matrix Pay (Especially Entry Level Pay)
ReplyDeleteIam TNEB Employee. In my Deportment wage rivision once in four years. But for state government once in 10 years. In tneb old wage expired 2015 November,we expect new wage arriear from 2015 December
ReplyDeleteஆசிரிய பணிக்காக காத்திருப்பவர்கள் தேர்வு முறையை உற்று நோக்குங்கள்
ReplyDeleteநண்பர்களே .. கடந்த PG ஆகட்டும் சமீபத்தில் நடந்த Polytechnic trb ஆகட்டும் Syllabus ஐ பின்பற்றி ஆழமாக வினாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது .. Coaching center போவது .. Xerox material வைத்து படிக்கிறது போன்ற விஷயங்களை பின்பற்றியவர்கள் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள் .. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் இத்தனை பேர் தேர்ச்சி என்பது வெறும் வெற்று விளம்பரமே .. 90 % பயிற்சி நிறுவனங்கள் Money motive ஆக செயல்படுபவையே ஆகும் .. வெற்றி பெற வேண்டும் என்றால் Syllabus ஐ நன்றாக Follow செய்யுங்கள். Group studies... points எடுத்து படிப்பது போன்ற உத்திகளை செய்யுங்கள் .. 10000 கட்டி Coaching center போனால் Pass ஆக முடியும் என்ற குறுகிய சிந்தனையை விட்டொழியுங்கள் .. இதை சொல்ல உனக்கு தகுதி இருக்கிறதா என்று திரும்ப நீங்கள் என்னை கேட்கலாம். 2012 முதல் TET ல் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் .. என் நன்பர்கள் நிறைய பேருக்கு பணி கிடைக்க எனக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுத்து வருகிறேன்.. காசு வாங்கி கொண்டு அல்ல .. கடுமையான முயற்சிகளை எடுங்கள் .. உங்களை மட்டுமே நம்புங்கள் .. வெற்றி நிச்சயம் ..
yes sir..u r ryt..myself followed the same...nanum first TET laye ulla vandhutta..keep hope in ur self who prepare for exams.
Deleteyes sir..u r ryt..myself followed the same...nanum first TET laye ulla vandhutta..keep hope in ur self who prepare for exams.
DeleteWat about the salary fr BT's who came in first TET aftr pay commission ?
ReplyDelete44900 plus one increment
DeleteWat about the salary fr BT's who came in first TET aftr pay commission ?
ReplyDeleteWhat will be the salary of 2017 bt teachers entry salary old or new pay commission
ReplyDelete