Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆவின் நிறுவனத்தில் பணிகள்

தமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம் : மேலாளர் - இன்ஜினியரிங்கில் 1, டெபுடி மேனேஜர் - டெய்ரியிங்கில் 2, பிரைவேட் செக்ரட்டரி - 1, கிரேடு 2 எக்ஸ்டென்சன் ஆபிசரில் 2, ஆபிஸ் எக்சிக்யூடிவில் 2, ஆபிஸ் ஜூனியர் எக்சிக்யூடிவில் 1, எலக்ட்ரிக்கல் டெக்னீசியனில் 1, பாய்லர் டெக்னீசியனில் 1, ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: மேலாளர் - இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்.,கில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டெபுடி மேனேஜர் - டெய்ரியிங் பதவிக்கு டெய்ரி சயின்ஸ், டெய்ரியிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.டெக்., முடித்திருக்க வேண்டும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் டைப்பிங் தேவைப்படும். எக்ஸ்டென்சன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப் பயிற்சி தேவைப்படும். இதே தகுதியே ஜூனியர் ஆபிஸ் எக்சிக்யூடிவ் பதவிக்கும் தேவை. எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் பதவிக்கு ஐ.டி.ஐ., படிப்பு தேவை. பாய்லர் டெக்னீசியன் பதவிக்கு பாய்லர் அட்டென்ெடண்ட் சான்றிதழ் படிப்பு தேவை. ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனுக்கு ஐ.டி.ஐ., தேவை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, டி.டி.,யுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,

 Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd.,

 Nanjikkottai Road,

Thanjavur - 613 006

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2017

விபரங்களுக்கு : www.aavinthanjavur.com/downloads/employment-notification.pdf




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive