Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.




அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009 வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,
அடிப்படை ஊதியம் : 4500
அகவிலைப்படி ஊதியம் : 2250
அகவிலைப்படி 24% : 1620
=======
(DA G.O.188.Dt.17.4.06) TOTAL : 8370
=======
ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்
அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
அகவிலைப்படி : NIL
=======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL : 8000
=======
முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)
இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.
(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)
01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது. அரசாணை 258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.
Certain Employees / Teachers Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.
பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது
பணியாளர் சங்கத்தில்
பணி ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது
ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்
ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்
Pay 14030 + 2800 GP + 750 PP = Total = 17580
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை
Pay 3 % 530 + 1800GP = 2330
22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்
Pay 15310 + 4600 GP = 19910
இதில் என்ன சந்தேகம் என்றால்
15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.
இந்த 750 இதனுடன் சேருமா?
அப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா?
ஒரு பதவி உயர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா? அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா?
ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது.
இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது..




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive