சென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால்,
போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின்
கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு, 40 சதவீதம் ஊனம் இருந்தாலே, நிபந்தனைகளின்றி
உதவித்தொகை வழங்கப்படும் என, 2016 பிப்., 22ல் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனாலும், இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக, அரசுடன், பல கட்ட
பேச்சு நடத்தியும், பயன் இல்லை. ஆண்டு வருவாய், மூன்று லட்சம் ரூபாய்க்குள்
இருந்தால் தான், உதவித்தொகை வழங்க, அரசு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது;
இதை ஏற்க முடியாது.
சமூக நலத்துறை அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வந்தும், அதிகாரிகள்
தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், போராடுவதை தவிர,
வேறு வழியில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை,
முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...