இது தொடர்பாக இன்று (அக்டோபர் 19) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புகள் அதிகமுள்ளதாக மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்தார். ஆனால், செங்கிப்பட்டியை ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடமாகத் தேர்வு செய்தார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. எனினும் மாநில அரசு தெரிவிக்கும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்” என்றார்.
தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் நிலவேம்பு குறித்து ஆராயத் தேவையில்லை என்று சொன்ன கணேசன், வித்தியாசமாகப் பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார் என்றார்.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் பலன்களைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் கூறிய இல.கணேசன், “ஜி.எஸ்.டி சீக்கிரமே மக்களுக்குப் பழகிவிடும்” என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...