Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரஷ்யா, மலேசியா செல்ல அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!

ரஷ்யா விண்வெளி மையம் , மலேசியா செல்லவும் இந்தியாவின் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா இத்தகைய ஓர் அறிய வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இது பற்றி ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திருமதி.ஸ்ரீமதி கேசன்  வெளியிட்டுள்ள தகவல். கிராமப்புற அரசுப்பள்ளி  மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களிடையே அறிவியல் போட்டியினை நடத்த உள்ளது.  இதில் அகில இந்திய அளவில்  அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தனியாக போட்டியும் தனியார் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக போட்டியும் நடத்திட உள்ளது.  போட்டியானது கீழ்காணும் தலைப்புகளின் கீழ் தேர்வு செய்யப்படும் 
     1. AVIATION/SPACE
     2.  AGRICULTURE
     3.  ELECTRONICS
     4. ROBOTICS
     5.  APP DEVELOPMENT
     6.  ELECTRICAL
மாணவர்கள் கீழ்க்கண்ட லிங்கினை கிளிக் செய்து தங்களின் பெயரினைப் பதிவு செய்திடல் வேண்டும்.
தனியார் பள்ளியிலிருந்து 100 செயல்திட்டமும் அரசுப்பள்ளிகளிலிருந்து 100 செயல் திட்டமும் தேர்வு செய்யப்படும் தேர்வு செய்யப்பட்ட செயல்திட்டங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும். அச்செயல்திட்டங்கள் சென்னையில் வைத்து நடுவர்களால் சிறந்த செயல்  திட்டம் ஒன்று தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவனுக்கு இந்தியாவின் இளம் விஞ்ஞானி பட்டமும் இரஷ்யா விண்வெளி மையம் இரண்டாம் இடம் பெறும் மாணவன் மலேசியா செல்லும் வாய்ப்புப் பெறுவர். 25 சிறந்த செயல் திட்டங்களுக்கு  பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் . வெற்றி பெற்ற பள்ளியின் முதல்வர்களும் ஊக்குவித்த ஆசிரியரும் பாரட்டப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு
Ms.Mohana Lakshmi.
7092212899
8838004242

9655816364
ப.கருணைதாஸ்
     அரசு மேல்நிலைப்பள்ளி,
     நாரணாபுரம் , 
     விருதுநகர் மாவட்டம்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive