இந்த இடைநிலை(2800) ஆசிரியர் என்ன பாவம் செய்தான்
அனைத்துவகையான ஆசிரியகளுக்கும் ஊதியம் உயர்த்திவிட்ட அரசு .750pp தலைவலியை
உருவாக்கி.ஆண்டுஊதிய உயர்வுக்கும். அகவிலைப் படி .சேர்த்து கணக்கீடு
செய்யப்பட்டது.
🔰ஆனால் தற்பொழுது உள்ள அரசு.750 யை2000 உயர்த்தி தீராத புற்றுநோய்யை உருவாக்கி உள்ளது.
🔰இந்த தனி ஊதியம் ஏழாவது ஊதியக்குழுவில் எதற்கும் பொருந்தாத ஒரு படி அவ்வளவே
🔰5200+2800 பெறும் இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 1.1.2011 -1.1.2016 காலகட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரிக்கு 4600+750 எனவும் , துவக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு 4500+750 எனவும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கப்பட்டது
🔰மேற்கண்ட காலத்தில் அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து வழங்கப்பட்ட 750தனி ஊதியம் 1.1.2016 ல் 2.57க்கு ஆளாகி 2000ஆக அடிப்படை ஊதியத்தோடு ஏழாவது ஊதியக்குழுவிலும் ஒளிந்துகொண்டு தொடர்கிறது
🔰இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் 750 பதவிஉயர்வு சென்றபிறகும் அடிப்படை ஊதியத்தோடு தொடர்ந்து ஏழாவது ஊதியக்கழுவிலும் தொடருவது எவ்வகையிலும் சரி ?
🔰இடைநிலை ஆசிரியருக்கு வழங்கிய தனி ஊதியம் ஏழாவது ஊதியக்குழுவில் பட்டதாரிக்கு , துவக்கப்பள்ளி த.ஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் + 2.57க்கு வருமெனில் 5200+2800 தர ஊதியத்தில் தொடரும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியருக்கு 2.57 க்கு பொருந்தாது போனதேன் ??
🔰1.1.2011 முதல் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்வதும் 2011க்கு முன்பாக சேராது என்பதும் , 2016 லிருந்து அடிப்படை ஊதியத்தோடு இணையாது என்பதும் லட்சக்கணக்கான ஊதிய முரண்பாடுகளை மேலும் மேலும் உருவாக்கும் ..
🔰தனிஊதியம் 750 ன் முரண்பாடுகள் ஏழாவது ஊதியக்குழுவிலும் தொடர்கிறது பல நீதிமன்ற வழக்குகளோடு ...
🔰அனைத்திற்கும் ஒரே தீர்வு 9300+4200மட்டுமே
அன்புடன்
சுரேஷ் மணி
நாமக்கல்
9943790308
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...