வரும் 2019 ஜூலை 1க்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, இந்த வசதிகள் அனைத்தும் சொகுசு கார்களில் தான் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எச்சரிக்கை இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக தயாரிக்கப்பட உள்ள கார்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட உள்ளது. காரின் வேகம், மணிக்கு 80 கி.மீ., தாண்டும் போது எச்சரிக்கை கொடுக்கும். 100 கி.மீ., வேகத்தை தாண்டும் போதும் நீண்ட எச்சரிக்கை கொடுக்கும்.120 கி.மீ., தாண்டும் போது நிறுத்தாமல் எச்சரிக்கையை கொடுத்து கொண்டே இருக்கும்.
ரிவர்ஸ் கியரில் காரை நிறுத்தும் போது, விபத்து ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் ரிவர்ஸ் கியரில் காரை கிளப்ப முயற்சிக்கும்போது எச்சரிக்கை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.நகர்ப்புறங்களில் இயக்கப்படும் இலக ரக வாகனங்களுக்கும் ஏர் பேக் மற்றும் ரிவர்ஸ் சென்சார்வசதி அமைப்பது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...