உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத்
தவறும் பெற்றோர், காவல் நிலையத்தில் உணவின்றி சிறை வைக்கப்படுவார்கள் என்று
மாநில அமைச்சர் ஒருவர் எச்சரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அமைச்சராக இருக்கும் ஓம்
பிரகாஷ் ராஜ்பார், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக,
பொதுக் கூட்டத்தில் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பலியாவின் ரஸ்டா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நானே ஒரு சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறேன். அதன்படி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்காத பெற்றோர், காவல் நிலையத்தில் 5 நாள்களுக்கு அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு உணவோ, குடிநீரோ வழங்கப்பட மாட்டாது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்காத பெற்றோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அந்த விடியோவில் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பேசியுள்ளார்.
அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தனது கருத்தில் தவறேதும் இல்லை என்றும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். கல்வி பயில்வதற்காக, அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்போது, பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இல்லை' என்று ஓம் பிரகாஷ் ராஜ்பார் பதிலளித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...