ஆசிரியை ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் செங்கல்பட்டுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு
அடுத்துள்ள சோகண்டி என்ற கிராமத்தில் உள்ளது லிட்டில் ஜாக்கி
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இதில் வல்லம் பகுதியைச் சேர்ந்த ப்ரியா
(பெயர் மாற்றம்) என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (பெயர் மாற்றம்) என்ற
மாணவர் அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். ‘அவர் சரியாகப்
படிக்கவில்லை. நடத்தை சரியில்லை. சொல்வதைக் கேட்பதில்லை’ என அந்த ஆசிரியை
ப்ரியா பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனைக் கடந்த மார்ச் மாதம் பள்ளியைவிட்டு
வெளியேற்றி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், கத்தியோடு இன்று
பள்ளிக்கு வந்திருக்கிறான். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த
ஆசிரியையின் தோள்பட்டைமீது குத்தினார். காயமடைந்த அந்த ஆசிரியை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளியில்
இருந்தவர்கள் அந்த மாணவரை பிடித்து திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில்
ஒப்படைத்திருக்கிறார்கள்.
Once uppon a time teachers ku payanthu students mariyathaiya irupanga!! Tharpothu government puthu puthu rule panunathunala students ku payanthu teacher iruka vendiya nilamaiya mariduchu,!!!
ReplyDelete