ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைபெற்ற 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான குழு 2 அல்லது3 தினங்களில் அமைக்கப்படும். 15 நாட்களுக்குள் இக்குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு பரிசீலிக்கும்.
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகள் அனைத்தும் ரூ.400 கோடியில் கணினிமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை குறித்து அறிந்துவருவதற்காக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கல்வித் துறை சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றார்.
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பல்லவி
ReplyDelete