Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு

7வது ஊதிய குழு பரிந்துரைகள் பற்றி அமைச்சரவை கூடி முடிவு எடுக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை ஏற்க கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி உள்ளோம். நேரில் சந்தித்து விளக்கம் தர தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்து உள்ளோம் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ கூறியுள்ளார்.

கடிதத்தின் விவரம்:

அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசிற்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். 7வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பளத்தை உயர்த்தவேண்டும் மற்றும் புது ஓய்வூதிய திட்டத்தை நிறுத்திவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது அவர்களுடைய முக்கியமான கோரிக்கைகள். அது சம்மந்தமாக தமிழக அமைச்சரவை நாளை கூடி முடிவெடுக்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சட்ட பஞ்சாயத்து இயக்கம் தன்னுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இந்த கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறது. (இது சம்மந்தமாக ஏற்கனவே 18 செப்டம்பர் அன்று ஒரு கடிதம் எழுதி இருந்தோம்.)

கட்டாயம் இல்லை:

மத்திய அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ள 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசிற்கு இல்லை. 1988இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் தர வாய்மொழி உத்திரவாதம் மட்டும் தான் தமிழக அரசு தந்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

வரி வருவாய் சரிவு:

தமிழக அரசின் சொந்த நிதி வருவாய் - 99590  கோடி
ஊழியர்களின் சம்பளம்  - 47000 கோடி
ஓய்வூதியம் - 21000 கோடி

அதாவது தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 67% ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு போய் விடுவதால் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது. இது தவிர மாநில அரசின் கடன் 4 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசின் சொந்த நிதி வருவாயும் (மொத்த வருவாயில் 61%) குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்

GST தாக்கம்:

தமிழக அரசின் ஜூலை மாத வரி வருவாய் - 5000 கோடி
GST மூலம் கிடைத்த வருவாய்  - 2750 கோடி
Non GST வரி வருவாய் - 2250 கோடி (மது மற்றும் பெட்ரோல்-டீசல் மூலம் கிடைத்த வருவாய்)

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி படி தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மத்திய அரசு பெட்ரோல்-டீசலை GSTக்குள் கொண்டுவர மும்முரமாக இருக்கிறது. இதனால் Non GST வரி வருவாய் எதிர்காலத்தில் பாதியாக  குறையும் பட்சத்தில் கடும் நிதி பற்றாக்குறை ஏற்படும்.

GSTயினால் கடும் நெருக்கடியில் இருக்கும் பஞ்சாப் அரசு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது. ஜனவரி மாதம் முதல் தமிழக அரசிற்கும் இதே நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
FRBMA சட்டத்திற்கு எதிராக அமையும்:

7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்றால் தமிழக அரசிற்கு 20000 கோடி வரை கூடுதலாக சுமை ஏற்படும். இதனால் தமிழக அரசின்  Fiscal deficit-GSDP Ratio மீண்டும் 3% மேற் (3.34%) செல்லும்.  (Fiscal deficit-GSDP Ratio should not be above 3% as per the Fiscal responsibility and budget management act). 7வது ஊதிய குழுவை ஏற்றால் FRBMA சட்டத்திற்கு எதிராக அமையும் என்பதை கோடிட்டு காட்ட இயக்கம் விரும்புகிறது.
 
வேலைநிறுத்தம் சட்டப்படி குற்றம்:

Tamilnadu Government employees act 1973 (Clause 22) மற்றும்  ESMA சட்டப்படியும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். TK ரங்கராஜன் vs தமிழக அரசு (2003) சுப்ரீம் கோர்ட் வழக்கிலும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருக்கிறது. சட்டத்தை மதிக்காமல்  மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சட்டப்படி அவர்களை வேலையில் இருந்து நீக்க முடியும் என்றாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரண்டு பணி உயர்வையும் சம்பள உயர்வையும் (Promotion and Increment) ரத்து செய்யலாம்.

நீதிமன்றம் தலையிட முடியாது:

சம்பள உயர்வு என்பது அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. நீதிமன்றம் தலையிட முற்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றி முடிவு எடுப்பது அரசினுடைய அதிகார எல்லைக்குள் உட்பட்டது, நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிடலாம்.
 
செயற்திறனுக்கேற்ப சம்பளம்:

மத்திய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளையும்  நிராகரித்துவிட்டு செயற்திறனுக்கேற்ப சம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்ற கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தி இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழவேண்டும். சிறப்பாக செயற்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களை விட 10% அதிகமாக ஊதியம் தரலாம்.

தற்பொழுதே, போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு சரியாக சம்பளம் தரமுடியாமல் இருப்பதாக செய்திகள் வருகின்றது. ஆதலால் தற்போதுள்ள சூழ்நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியமில்லை. 2% (தமிழக மக்கள் தொகையில்) அரசு ஊழியர்களுக்கு (12 லட்சம்), 7வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு கொடுத்தால் அனைத்து தமிழக மக்களும் (8 கோடி மக்கள்) பாதிக்கப்படுவார்கள். இது அரசு ஊழியர்களுக்கு எதிரான செயல் இல்லை, மக்களுக்கு ஆதரவான செயல் என்பதை அரசு ஊழியர்களுக்கு புரிய வைத்து, அவர்கள் ஒப்புதலோடு இதை செயல்படுத்த வேண்டும்.

அரசு சரியான முடிவு எடுத்தால் சட்ட பஞ்சாயத்து இயக்கம் அரசிற்கு துணையாக நின்று, மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

இது சம்மந்தமாகவும் பென்ஷன் திட்டம் பற்றியும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.




9 Comments:

  1. சட்ட பஞ்சாயத்து என்ற பெயரை கட்ட பஞ்சாயத்து என கூறலாம். அடிப்படை புரியாதவர்கள்

    ReplyDelete
  2. கட்டபஞ்சாயத்து

    ReplyDelete
    Replies
    1. loosu avanga solurathu unmai ithukuda porinjika mudiyatha unaku 7 th pay commision vera kedu.

      Delete
  3. தமிழகத்திற்கு ஒரு பீட்டா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. சரியாக சொல்லியுள்ளது சட்ட பஞ்சாயத்து இயக்கம்.. இவனுகளுக்கு எதுக்கு சம்பள உயர்வு ஆபீஸுக்கு போய் பெஞ்ச் தெய்க்கர நாய்களுக்கு..

    ReplyDelete
  5. tasmac rate yethi unaku sambalam kodukum tamil nadu ithu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive