முன்னாள் மாணவர்கள், 1.50 லட்சம் ரூபாய் செலவில், அரசு
நடுநிலைப்பள்ளி வளாகத்தை சீரமைத்தனர்.
பெருங்குடி மண்டலம், 188வது வார்டு,
மயிலை பாலாஜி நகரில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகம், 2
ஏக்கர் பரப்பளவுகொண்டது.
பள்ளியை சுற்றி நான்கு திசைகளிலும், தெருக்கள் உள்ளன. சாலை உயரம்
அதிகரித்ததால், பள்ளி வளாகம் பள்ளமாக மாறியது. ஒவ்வொரு மழையின்போதும்,
மழைநீர் பள்ளியில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.ஸ்ரீவில்லிபுத்துாரில்
உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில்,
1990ம் ஆண்டு, 180 மாணவர்கள் படித்தனர்.
தற்போது, அவர்கள் பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும்,
ஏதாவது ஒரு நாளில், இவர்கள் அனைவரும் ஒன்றிணைவர். அவர்கள், 2015ல்,
'எ.கே.சி.இ., - 90 இதயம்' என்ற பெயரில், அறக்கட்டளை துவங்கினர்.முன்னாள்
மாணவர்களான இவர்கள், மயிலை பாலாஜி நகரில், அரசுநடுநிலைப்பள்ளிக்கு உதவ
முன்வந்தனர். இவர்கள், 1.50 லட்சம் ரூபாய் செலவில், வளாகத்தில், மழைநீர்
தேங்காத வகையில், 20 லாரி மண்ணை கொட்டி சமப்படுத்தினர்.
அதேபோல், குடிநீர் குழாய்கள் சீரமைப்பு மற்றும் வளாகத்தை சுற்றி, 50 மரக்கன்றுகள் நட்டனர்.
இதன் மூலம், பள்ளி வளாகத்தை மழைநீரில் இருந்து பாதுகாப்பதுடன், மரங்களால் பசுமையாக மாறும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...