பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களும்,
நகர்புறங்களில் உள்ள, சில முன்மாதிரி அரசுப் பள்ளிகளிலே அமல்படுத்துவதால், கிராமப்புற பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், 1,650 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கற்றல், கற்பித்தல் திட்டங்களுக்கு, பல லட்சங்கள் நிதியாக, ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.’விருட்சுவல் கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புகள் முதல், இலவச கராத்தே பயிற்சி, புதிய வகை விளையாட்டுகள் அறிமுகம் என, பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முன், சோதனை முறையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசுப் பள்ளிகளில் மட்டும், அறிமுகம் செய்யப்படும். இதற்கு,சில அரசுப்பள்ளிகளின் பெயர்களே, எப்போதும் சிபாரிசு செய்வது வழக்கமாகிவிட்டது.இத்திட்டங்கள், பிற பள்ளிகளுக்கு விஸ்தரிக்காமல் சுணங்கிவிடுவதால், குறிப்பிட்ட பள்ளி மாணவர்களே, பயனடையும் நிலை தொடர்கிறது.கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’கோவையில், கல்வித்துறை முன்மாதிரி திட்டங்கள் அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அளிப்பதால், அங்குள்ள மாணவர்கள் மட்டுமே, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர். சிறந்த பள்ளிகளுக்கான விருதையும் தக்கவைத்து கொள்கின்றனர்.
தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புக்கு, கைமாறாக இதுபோன்ற செயல்கள் நடப்பதால், பின்தங்கிய கிராமப்புற பள்ளிகளின் நிலை, படுமோசமாக மாறிவருகிறது.’நகர்புற பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற பள்ளிகளுக்கும், முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தினால் மட்டுமே, மாணவர்களின் தொடர்பு திறனை வளர்த்தெடுக்க முடியும்.எனவே, இனிவரும் காலங்களிலாவது, அரசின் புதிய கல்வித்திட்டங்கள் செயல்படுத்த, கிராமப்புற பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete