Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளம் வயதிலேயே ஏற்படும் வழுக்கையை எப்படி தடுப்பது?

77 சதவீத ஆண்கள் வழுக்கையால் அவதிப்படுகிறார்கள். வயதானபிறகு வழுக்கை விழுந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது.
ஆனல் இளம் வயதிலேயே பலருக்கு வழுக்கை ஏற்படுகின்றது. அப்படியே வெளியே செல்வது சங்கோஜமாகத்தான் இருக்கும்.

வழுக்கை ஏற்படுவதற்கு நிறைய காரணங்களை கூறலாம். ஆனால் முக்கியமான ஒன்று மரபணுக்கள். டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன்தான் உங்கள் தலைமுடியின் பலத்தை நிர்ணயிக்கும்.

பரம்பரையாக சிலருக்கு இந்த ஹார்மோன் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இதன் காரணமாக சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடும். பரம்பரையாகத்தான் இந்த வழுக்கை ஏற்படுகிறது என்றில்லை யாருக்கும் ஏற்படலாம். ஆகவே வருமுன் காப்போம் என்ற மந்திரம் ஓதுவது நல்லதில்லையா.

தலை முடி இருக்கும்போதே ஒழுங்காக அதை பராமரித்தால், உங்கள் அப்பாவிற்கு ஏற்பட்டது போல், உங்களுக்கும் வழுக்கை உண்டாகாமல் தடுக்கலாம்.

இந்த வழுக்கையை எப்படி தடுக்கலாம்?

நீங்கள் உங்கள் தலைமுடியை நன்றாக பராமரித்தால், வழுக்கை விழுவதை தடுக்கலாம். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியுங்கள். உங்களுக்காக இங்கே கூறப்படும் குறிப்புகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்தினால் , நிச்சயம் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

வெந்தயம் :

வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் 1 ஸ்பூன் போட்டு அதனை இரவில் நீரில் ஊற வைத்துவிடுங்கள். மறு நாள் இந்த ஊறிய கலவையில் சிறிது கருவேப்பிலை கலந்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து த்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து , நன்றாக தேய்த்து தலைமுடியை அலசுங்கள். ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை. வாரம் ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும். ஒருபோதும் முடி கொட்டாது

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் ஒரு கப் எடுத்து அதில் மருதாணி இலையை 4 டேபிள் ஸ்பூன் போட்டு, கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும் இந்த எண்ணெயை நன்கு வடிகட்டி தினமும் தலையின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி நன்கு தூண்டப்படும்..

வெங்காயம் மற்றும் தேன் :

வெங்காயத்தை நன்கு அரைத்து அதனுடன் தேன் சேர்த்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம்.

வெங்காயத்திலுள்ள சல்ஃபர் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ரத்த ஓட்டத்தை தலையில் அதிகரிக்கச் செய்யும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive