தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழகம் முழுவதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள், இன்று நடக்கின்றன.பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியரின் தனித்திறனை வளர்க்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட அளவிலான கவிதை,கட்டுரை, பேச்சு போட்டிகளை, இன்று நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
இது போல், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான விண்ணப்பம், அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...