கர்ப்பிணிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், விரைவில் அரசு 'இசேவையில்' இணைக்கப்பட
உள்ளது.அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலம் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில்
'இசேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.
அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம வறுமை
ஒழிப்புசங்கங்கள் சார்பிலும் 'இசேவை' மையங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு
ஜாதி, வருமானம், இருப்பிடம், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ்கள், திருமண
உதவித்தொகை, பாஸ்போர்ட், பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு
வருகின்றன.சுகாதாரத் துறை செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
மகப்பேறு திட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு மூன்று கட்டங்களாக தலா 4 ஆயிரம்
ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தற்போது 'ஆப்லைன்' மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரைவில் 'இசேவையில்' இணைக்கப்படுகிறது. இதற்காக 'சாப்ட் வேரில்' மாற்றம் செய்யப்பட்டு, 'இசேவை'மைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...