மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில்
விளம்பரங்களில் சினிமா மற்றும் விளையாட்டு துறை
சார்ந்த பிரபலங்களுக்குப் பதிலாக நிஜ வாழ்வில் சாதனை படைத்தோரின்
வாழ்க்கைக் கதையைப் பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள சுமார் 40 கோடிப் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டந்தான் ‘ஸ்கில் இந்தியா’. இத்திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும் அரசு சார்பில் ஸ்கில் இந்தியா விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில், பாலிவுட் நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான பிரியங்கா சோப்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்கோத்ரா, சபானா அஸ்மி மற்றும் பாடகர் மோஹித் சவுகான் உள்ளிட்ட பிரபலங்கள் (எவ்வித தொகையும் பெறாமல்) நல்லெண்ணத் தூதர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக உயரதிகாரி ஒருவர், “சினிமா விளையாட்டு போன்ற துறைகளில் பிரபலமானவர்களுக்குப் பதிலாக வெற்றியடைந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை ஸ்கில் இந்தியா விளம்பரங்களில் மிகைப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...