பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு
முடிக்காத, ௧,௦௦௦ கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிகளை
நியமிக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, ௮௩ அரசு
கல்லுாரிகளில், ௮,௦௦௦க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதுதவிர,கல்லுாரிகளில் இரண்டாம், 'ஷிப்டு' எனப்படும், பிற்பகல் நேர பாடப்பிரிவுக்கு வகுப்பு எடுக்க, தற்காலிக சம்பளத்தில், ௧,௬௫௦ முதுநிலை பட்டதாரிகள், கவுரவ பேராசிரியர்களாக பணியில் உள்ளனர்.இவர்களுக்கு, மாதம், ௧௦ ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்தாண்டு பிப்ரவரியில், சம்பளம், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு, 1௦ மாதம் பணி கொடுத்து, அதற்கு ஊதியம் தரப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் லட்சக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள், பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், மத்திய அரசின் பல்கலை மானியக் குழு விதிப்படி, 'நெட், செட்' என்ற, பேராசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்துள்ளனர்.ஆனால், அரசு கல்லுாரிகளில், கவுரவ பேராசிரியர்களில் பலர் முறைப்படி, ஆராய்ச்சி படிப்பு மற்றும், 'நெட், செட்' தேர்வில் தேர்ச்சிபெறவில்லை என, தெரிய வந்துள்ளது.அவர்களின் பட்டியலை சேகரிக்க, கல்லுாரி கல்வித் துறைக்கு, உயர் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பட்டியல் தயாரானதும், அவர்களை நீக்கி, பிஎச்.டி.,மற்றும் தகுதித் தேர்வு முடித்தவர்களை பணியில் அமர்த்த, உயர் கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...