அமெரிக்காவில் செல்ல பிராணியான நாய் ஒன்று, மிக நீளமான நாக்கு கொண்ட நாய் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
தெற்கு டகோட்டா மாகாணத்தைச் சேர்ந்த கார்லா ரிக்கெர்ட் என்ற பெண் எட்டு வயதுள்ள மோச்சி என்ற செல்ல பிராணியை வளர்த்து வருகிறார். செயிண்ட் பெர்னார்டு வகையைச் சேர்ந்த இந்த நாய்க்கு 18.58 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நாக்கு உள்ளது. அதனால், உலகின் நீளமான நாக்கு கொண்ட நாய் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தினமும் அந்த நாய் தெருவில் செல்லும்போது பெரும்பாலானோர் வந்து புகைப்படம் எடுத்து கொள்வார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மீட்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து மோச்சியை தத்தெடுத்தேன்.
மோச்சி அலங்காரமான ஆடைகளை அணிவதை விரும்பும். இனிப்பு உருளைக்கிழங்கை விரும்பிச் சாப்பிடும். அதிகளவில் சவால்களை சந்தித்து இந்த சாதனையை படைத்துள்ள மோச்சிக்கு சுவாச பிரச்சனைகள் உள்ளது. அதனால் தரையில் இருந்து பொருட்களை எடுக்க முடியாமல் கஷ்டப்படும் என நாயின் உரிமையாளர் கார்லா ரிக்கெர்ட் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை தலைமை நிர்வாகி கிரெய்க் கிளெண்டே, மோச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் வருவதை உற்சாகமாக வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...