ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் கணக்கைத் தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் போன்றவற்றைக் கொண்டு ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்குவது தற்போது நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு விட்டாலோ, பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும்.
இதற்கு மாறாக, முகத்தையே பாஸ்வேர்டாகவும், அடையாள உறுதிச் சான்றாகவும் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன், புதியமுறை நடைமுறைப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது
Gdgbxgv
ReplyDelete