'அரசு
பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க
வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர்,
அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...