Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி நீண்ட நேரம் பயன்படுத்தும போது கண்கள் பாதிப்படையாமல் இருக்க தவிர்க்க வேண்டியது என்னென்ன?

விஞ்ஞான உலகில் தற்போது எந்த துறையிலும் கணினி (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது. பொருட்கள் விற்பனை முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது.
இதனால் கணினி கல்வி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமின்றி தற்போது அனைத்து கல்லூரிகளிலும் கணினி கல்வி இடம் பெற்றுள்ளது. இதனால் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் தற்போது அத்தியாவசிய பொருளாகி விட்டது. கணினியில் பணியாற்றும் போது நம் கண்கள் பாதிக்கப்படுகிறது. கணினியை பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினைக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட் ரோம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த பிரச்சினை 21-ம் நூற்றாண்டு மனித குலத்துக்கு அளித்த ஒரு தண்டனையாகும். கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பற்றி தெரிந்து கொள்வது இப்போது அவசியமானது.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் முதல்நிலையில் ஏற்படும் அறிகுறி கண்களில் வலி ஏற்படுவது. பின்னர் மங்கலான பார்வை, உலர்ந்து விட்ட கண்கள், தலைவலி போன்றவையும் ஆரம்ப காலத்தில் எட்டிப்பார்க்கும் அறிகுறிகளாகும். கழுத்து வலிக்கும், முதுகு வலிக்கும் கணினியின் முன் அமர்ந்து நமது கண்களை பயன்படுத்துவதற்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் டாக்டர்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான காரணம் நாம் சாதாரணமாக பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டுவோம். கம்யூட்டர் திரையை உற்றுப்பார்க்கும் போது கண் சிமிட்டுவது இயல்பாகவோ குறைந்து விடுகிறது. நாம் வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம். கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் போது 5 அல்லது 6 முறை தான் சிமிட்டுகிறோம். இது கண்களில் அரிப்பு, கண்கள் உலர்ந்து போதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சினைவராமல் தடுக்க முதலில் கம்யூட்டர் மானிட்டரை கீழாக இறக்கி வைக்க வேண்டும். கம்யூட்டர் மானிட்டரின் நடுப்பகுதி கண்களின் நேர் பார்வையில் இருந்து 5-6 அங்குல அளவுக்கு கீழாக இருக்க வேண்டும். நேருக்கு நேர் கண்களில் படக் கூடாது.

நீங்கள் உட்கார்ந்து இருக்கும் போது காற்று வீசக்கூடிய மின்விசிறி அல்லது ஏ.சி.யின் வழியே வெளியிலும் காற்று செல்லக்கூடாது. ஏ.சி. அறையில் காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். கணினியில் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகி விடும். அப்போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளை சுழற்ற வேண்டும்.

மானிட்டர் மூலம் பிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை கணினியில் வேலை செய்யும் போது அணிய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களும் இதை பயன்படுத்த வேண்டும். 40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து என்று கூறப்படும் குறைபாடு வரக்கூடுமம். அவர்கள் அதற்காக அணியும் கண்ணாடி லென்ஸ் மானிட்டரில் பிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் லென்சுகளாக அமைய வேண்டும்.

மானிட்டர் தட்டையாக இருப்பது நல்லது. மானிட்டரின் வெண் திரையில் கருப்பு நிற எழுத்து, உருவங்கள் கண் பார்வைக்கு நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியம் சிறிய எழுத்தை விட 3 மடங்கு பெரிய எழுத்தை தான் கணினியின் திரையில் நீங்கள் அமைக்க வேண்டும். கணினி திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரத்துக்குள் இருக்கக்கூடாது.

கண் இமைகளை தேவையான அளவுக்கு அசைக்காத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டு விடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக கம்ப்யூட்டரை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்து விட்டு வர வேண்டும்.

தலைக்குமேல் இருந்து வரும் ஒளியோ, ஜன்னலில் இருந்து வரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாக படக்கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்கு தொல்லை படுத்தும் மின் விளக்குகளை அணைத்து விடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive