புதுக்கோட்டை, பரிமாற்று திட்டத்தின்படி, ஒரு நாள் கல்வி பயில வந்த,
மாணவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி அருகே, மீனம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
செயல்படுகிறது.
பள்ளி பரிமாற்று திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட,
வடவாளம், அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20
-பேர் மற்றும் மூன்று ஆசிரியர்கள், நேற்று மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளிக்கு வந்தனர். அந்த மாணவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது.இதில், மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ்,
விவேகானந்தர், டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் வேடம் அணிந்தவர்கள்,
மங்கள இசை முழங்க, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பரிமாற்றுத்
திட்டத்தின் படி, பள்ளிக்கு வந்த அனைவரையும், பள்ளி தலைமை ஆசிரியை,
ஜெயலெட்சுமி வரவேற்றார்.வடவாளம் பள்ளி மாணவர்கள், கல்வி கற்பிக்கும் முறை,
விளையாட்டு முறைகளை பரிமாறி கொண்டனர். 'துாங்கா நகரம்' என்ற பாடத்தை, நவீன
தொழில் நுட்பத்துடன், புரஜெக்டர் மூலம், மாணவர்களே நடத்தினர். இதையடுத்து,
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி பரிமாற்று திட்டத்தால்,
ஒரு பள்ளியில் கல்வி பயிலும் முறை, தொழில்நுட்பங்கள், அப்பள்ளியின்
செயல்பாடுகள், பழக்க வழக்கங்களை, மற்ற பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள
முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...