சென்னை தனியார் மருத்துவமனைக்கு டெங்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், முதல்வர்
காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்றுக்கொள்ளப்படாததால்,
சிரமத்திற்குள்ளாகின்றனர். முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை ஏன் சேர்க்கப்படவில்லை என்பது
குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளை தூர்வாரிவெள்ள பாதிப்பை தடுப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றிதொற்று நோய் வரமால் தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் கூடுதலாக மனு ஒன்றையும் அவர்தாக்கல் செய்தார். அந்த மனுவில் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் அதிக அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.
இதனால் பலருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல்போகிறது, மேலும் டெங்கு காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்படாததால் இலவச சிகிச்சை இல்லை என தெரிவிக்கின்றனர்.எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தமனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிஎம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்'டெங்கு' ஏன் சேர்க்கப்படவில்லை ? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது ? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...