சென்னை: 'பள்ளி தலைமை ஆசிரியர்களின், ௨௧ ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என, தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி வெளியிட்ட
அறிக்கை:மத்திய அரசு அறிவித்துஉள்ள படிகள் மற்றும் சலுகைகளை, தமிழக அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை, ௧௮
ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். ஊதிய உயர்வை, ௨௦௧௬ முதல் கணக்கிட்டு,
௨௧ மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.தலைமை ஆசிரியர்களுக்கு, மூன்று
ஊதியக்குழுக்களில், தற்காலிக நிவாரணமான, தனி ஊதியமே
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை
தமிழக அரசு, தீர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Come out from the chair and join with teachers.
ReplyDelete