செல்போன் நிறுவனங்கள் ஆதார் எண்ணுக்கு பதிலாக, டிரைவிங் லைசன்ஸ்,
பாஸ்போர்ட், ரேசன் கார்டு ஆகியவற்றை சந்தாதாரர்களிடம் ஆவணங்களாக பெற்று
கொள்ள உத்தரவிடுவது குறித்து தொலை தொடர்பு துறை ஆலோசித்து வருகிறது.
பிப்ரவரி மாத இறுதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சந்தாதாரர்களின்
செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பல்வேறு தரப்பினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்ற
உத்தரவை தொடர்ந்து தொலைத் தொடர்பு துறை மாற்று ஆவணங்கள் பெறுவது குறித்து
முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதார் எண் இல்லாத உடல்நலம்
குன்றியவர்கள், மாற்று திறனாளிகள் போன்றவர்களிடம் தொலைத் தொடர்பு
நிறுவனங்கள் வீடுகளுக்கே சென்று விசாரித்து உறுதி செய்து கொள்ளவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...