பல்கலைக்கழகங்களில் உள்ள மதப் பெயர்களை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை யூ.ஜி.சி மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் 10 பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உள்ள மத பெயர்களால் அங்கு பயிலும் மாணவர்களிடையே வேறுபாடு நிலவி வருகிறது. மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மதப் பெயர்களை பிரதிபலிக்கக் கூடாது.
அதனால், பல்கலைக்கழகங்களில் உள்ள மதப் பெயர்களை நீக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை, அலிகார் பல்கலைக்கழகம் என்றும், பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தை, பனராஸ் பல்கலைக்கழகம் என்றோ அல்லது அந்த பல்கலைக்கழகங்களை நிறுவியவர்களின் பெயர்களிலோ மாற்றி அமைக்கலாம் என யூ.ஜி.சி. பரிந்துரை செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...