ரிலையன்ஸ் கயூனிகேஷன்ஸ் வருகின்ற நவம்பர் 18ம் தேதி முழுமையாக டிடிஎச் சேவையினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
டிடிஎச் சேவைக்கான உரிமம் முடியப்போவதாகவும் மேலும் சேவையினைத் தொடர்ந்து அளிக்க முடியவில்லை என்பதாலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவை நிறுவனத்தினை மூடப்போகின்றது என்ற செய்தியினையும் நிர்வாக உறுதி செய்துள்ளது.
சந்தை நிலவரம்
ஆர்காம் நிறுவனத்தின் கீழ் 2 சதவீத டிடிஎச் சந்தை மட்டுமே உள்ளது. டிஷ் டிவி நிறுவனத்திடம் 24 சதவீத சந்தையும், டாடா ஸ்கை நிறுவனத்திடம் 23 சதவீதமும் அதிகபட்சமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் நிலை
டிடிஎச் சேவை வழங்குவதில் இருந்து விலகுவதால் தங்களது வாடிக்கையாளர்களைப் பிற சேவை வழங்குனருக்கு மாறக் கோரிக்கை வைத்து வருகிறது ஆர்காம். அதுமட்டும் இல்லாமல் மூன்று முக்கிய டிடிஎச் நிறுவனத்திடம் தங்களது வாடிக்கையாளர்களை மைகிரேட் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
ஊழியர்கள்
ஆர்காம் நிறுவனத்திற்குச் சிக்கல் இதோடு முடியவில்லை. வருவாய்ச் சரிந்துகொண்டு வந்ததால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 800 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
சன் டிடிஎச்
2013-ம் ஆண்டுச் சன் டிடிஎச் நிறுவனத்துடன் தனது சேவையினை இணைக்க ஆர்காம் முடிவு செய்தது, ஆனால் மதிப்பீட்டில் இருந்து வித்தியாசத்தால் அது சாத்தியம் இல்லாமல் போனது.
தொலைத்தொடர்பு துறை
அன்மையில் ஆர்காம் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்து ஏர்செல் நிறுவனத்துடன் இணைய எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...