தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி
விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.09)
உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் அமல்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 09) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், குறித்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் அதைச் செய்யாமல் இருப்பதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.
மனுதாரரின் புகார் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலர் டி.ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...