தெற்கு
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த
மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த அக்.3 முதல் அக்.5 வரை தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில் பங்கேற்ற பழநி, மஞ்சநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர் ராஜசேகரன்,11, சுருள்வாள் வீச்சு, கம்புச் சண்டை ஆகியவற்றில் 2 தங்கப்பதக்கம், ஆயக்குடி ராஜீ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர் ஆறுமுகம்,7, ஒற்றைக் கம்புவீச்சு, வேல்கம்பு ஆகியவற்றில் இரண்டு தங்கமும், இரட்டைக் கம்புவீச்சு, கம்புச்சண்டையில் இரண்டு வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
பழநி, காரமடையை சேர்ந்த கோவை கல்லுாரியின் எம்.பி.ஏ., மாணவர் பிரபு,24, கம்புச் சண்டை, ஒற்றைக் கம்புவீச்சு, வேல்கம்பு வீச்சு ஆகியவற்றில் மூன்று தங்கம் வென்றுள்ளார். அவர்களை பயிற்சியாளர் வேங்கைநாதன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...